உடலுக்கு சத்து தரும் ஓட்ஸ் சூப்..

உடலுக்கு சத்து தரும் ஓட்சை, சிலர் உப்புமா, இட்லி, தோசை வகைகளில் சமைத்து சாப்பிடுவார்கள். அந்த வகையில், இன்று நாம் ஓட்ஸ் கொண்டு சூப் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ்- ஒரு கப்சின்ன வெங்காயம் - 4தக்காளி - ஒன்றுமிளகு - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிபட்டை - சிறிய துண்டுபூண்டு - 5 பல்தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டிஎண்ணெய் - தேவைக்கேற்பஉப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மிகக் சிறியதாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.

பூண்டு வதங்கிய பின்னர் ஓட்ஸை சேர்த்து பிரட்டவும்.

ஓட்ஸை லேசாக வதக்கி, அதனுடன் நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் தனியா தூளையும் சேர்த்து கொதிக்க விடவும்.

சூப் நன்றாக கொதித்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் மிளகைப் பொடித்து சூப்பில் சேர்க்கவும்.

சுவையான ஓட்ஸ் சூப் ரெடி!!!

More News >>