தமிழக அரசு 7 பேர் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அமைச்சரவையை கூட்டி 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் கலைஞர் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த கழகத்தின் நிலைப்பாடாகும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும்; 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.