ஹெல்மெட் போடலையா.. அப்போ பெட்ரோல் கட்.. வங்காளதேச அரசு அதிரடி

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று வங்காளதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வங்காளதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால், அம்மாநில தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொது மக்கள் சேர்ந்து சாலை வசதியை மேம்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்காள தேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டம் கொண்டு வரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, தலையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனை பங்குகளுக்கு புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர, பைக்கில் இரண்டு பேருக்கு மேல் செல்லக்கூடாது, இரண்டு பேருக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை வங்கதேசம் அரசு பிறப்பித்துள்ளது.

More News >>