தெலங்கானா அரசு கலைப்பு... காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ்!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார்.

தெலங்கானா அரசின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் 8 மாதங்கள் உள்ளது. ஆனால், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆட்சியைக் கலைப்பதற்கு ஆளுநர் நரசிம்மனிடம் பரிந்துரை செய்தார்.

சந்திரசேகர ராவின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதலமைச்சர் சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, காபந்து முதலமைச்சராக சந்திரசேகர ராவ் அறிவிக்கப்பட்டார். தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டதால் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலுக்கான 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சந்திரசேகர் வெளியிட்டுள்ளார். அந்தப்பட்டியலில் தற்போது எம்.எல்.ஏவாக உள்ள இரண்டு பேருக்கு இடம் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>