ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ விளக்கம்...
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக அப்போலோ மருத்துவமனை தரப்பு ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அப்போலோ மருத்துவமனை விசாரணைக்கு ஒத்துழைக்கிவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க கோடி கணக்கில் பணம் பெற்ற போதும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அப்போலோ மருத்துவர்கள் ஆஜராக வேண்டிய தேதியில் வரவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது குறித்து பேசிய அப்போலோ நிர்வாகத்தின் வழக்கறிஞர் மஹிபுனா பாஷா, இதுவரை, அப்போலோவை சேர்ந்த 37 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி இருந்த்ததால் ஆணையம் அளித்த சம்மன் காலத்திற்குள் ஆஜராக முடியவில்லை."
"இதனால் கால அவகாசம் கேட்டு இருந்தோம். ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் அளித்து வருகிறோம். இந்நிலையில் அடுத்த வாரம் மருத்துவர்கள் ஆஜராவார்கள். அவர்களுக்கு புதிய தேதிகளை ஆணையம் ஒதுக்கி இருக்கிறது" என தெரிவித்தார்.