பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் நளினி, மகளின் திருமணத்திற்காக ஆறு மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பரோல் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என கூறி, பரோல் வழங்க முடியாது என தமிழக அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, பரோல் கோரிய தன் மனுவை வாபஸ் பெற்றுகொள்வதாக நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

More News >>