ஐ லவ் யூ சொல்லி டீச்சரை லவ் டார்ச்சர் செய்த மாணவன்

வேலூர் அருகே கல்வி கற்று தரும் ஆசிரியைக்கு பிளஸ்டூ மாணவன் ஐ லவ் யூ சொல்லி இம்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணம் ஆகாத ஆசிரியை ஒருவர், 10-ம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டான். “மாலாக்கா ஐ லவ் யூ', மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க'' என்று ஆரம்பத்தில் சின்ன சின்ன இம்சைகளை ஆசிரியைக்கு கொடுத்து வந்துள்ளான்.

மாணவனின் குறும்பு தனம் நாளடைவில் வக்கிரமாக மாறிவிட்டது. ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் அந்த மாணவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். அந்த போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பி காதல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

மாணவனை நேரில் அழைத்த ஆசிரியை அறிவுரை கூறி கண்டித்துள்ளார். திருந்ததாத மாணவனின், சேட்டை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே இருந்துள்ளது. திடீரென ஒருநாள் இரவு ஆசிரியையின் செல்போனுக்கு '160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர்... ஐ லவ் யூ டீச்சர்' என மெசேஜ் செய்துள்ளான்.

இதனால் எரிச்சல் அடைந்த ஆசிரியை, தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளார். மாணவனை அழைத்து கண்டிக்காத தலைமையாசிரியர், புகார் அளித்த ஆசிரியை சமாதானம் செய்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் தான், மாணவன் வகுப்பறையில் ஆபாச படம் பார்த்து கையும் களவுமாக சிக்கிக் கொண்டான்.

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆசிரியைக்கு மாணவன் காதல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆசிரியை மற்றும் மாணவிகளை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த மாணவன், அதை அவ்வப்போது பார்த்து ரசித்ததும் தெரியவந்துள்ளது. மாணவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இத தொடர்பாக எம்மாதிரியான நடவடிக்கை எடுப்பது என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தெய்வத்தை காட்டிலும் முதன்மையாக பார்க்கப்படும் ஆசிரியைக்கு மாணவன் காதல் தொல்லை கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News >>