ராஜஸ்தானில் கோர விபத்து: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆறு ஒன்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், சம்பவ் இடத்திலேயே 32 பேர் பலியாயினர். மேலும், காயமடைந்தவர்கள் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் சபாய் சவாய் மதோபூர் நகரில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் லால்கோட் நோக்கி பேருந்து பயணித்தது. துபி என்ற இடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் பேருந்து வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர், பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. இதனால், பேருந்து தண்ணீரில் மூழ்கியது. இதனால், உள்ளே இருந்த பயணிகள் தண்ணீருக்குள் மூழ்கி உயிருக்கு போராடினர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தில் கயிறு கட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியே இழுத்தனர்.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>