மூக்குப்பீறி இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலை பள்ளி ஸ்மார்ட் வகுப்பு தொடக்க விழா
நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியில் நேற்று காலை 10 மணியளவில் மூ.பி.இந்திய ஏக இரட்சகர் சபை நடுநிலை பள்ளியில் கணனி வழிக்கல்வி வகுப்பறை SMART CLASS ROOM (ஸ்மார்ட் வகுப்பு) தொடக்கப்பட்டது.
சபையின் தலைமை போதகரும் பள்ளியின் ஆசிரியருமான சவுந்தரராஜன் ஆரம்ப ஜெபம் செய்ய பள்ளியின் தாளாளர் மதுரம் தலைமையில் ஆழ்வார் திருநகரி வட்டார கல்வி அலுவலர் செல்வி அவர்கள் வகுப்பறையை திறந்து வைத்தார்.
பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட புரஜெக்டர் ஐ பழைய மாணவர் சங்க தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங் சுவிச்ஆன் செய்து ஆரம்பித்து வைத்தார் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ததேயு மைக்கேல் ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசிரியர் ராஜன் ஆசிரியை ஜென்சி இருவரும் கணனிகளை இயக்கி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு திரையில் பாடம் (SMART CLASS ) நடத்தினர் . ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.
பள்ளியின் ஆசிரியர்கள் புஷ்பராணி , அகஸ்டா மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.