காவிமயமாக்கும் பாஜகவை வீழ்த்துவது... திமுக தீர்மானம்

காவிமயமாக்கும் மத்திய பாஜக-வின் கனவுகளை நிராகரித்து, வீழ்த்துவது என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

"காவிமயமாக்கும் மத்திய பாஜக வின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவது, ஊழலின் மொத்த உருவமான அதிமுக அரசை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவது"

"காவிரி நீர் கடைமடைக்கு செல்லவும், வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும். பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்பது,"

குட்கா ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" என்பன போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

More News >>