தங்க மெடல் வாங்கினார் அன்குர் மிட்டல்

உலக துப்பாக்கி சுடுதல் ’டபுள் டிராப்’ பிரிவில் இந்திய வீரர் அன்குர் மிட்டல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

தென் கொரியாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர்களுக்கான ‘டபுள் டிராப்’ துப்பாக்கி சுடுதலில், 140 புள்ளிகளுடன் இந்தியாவின் அன்குர் மிட்டல், சீனாவின் இயாங் யாங் மற்றும் சுலோகோவாக்கியாவின் ஹூபர்ட் ஆன்ட்ராஜ் முன்னிலை வகித்தனர்.

இதனால், இம்மூவருக்கிடையே ‘டை பிரேக்கர்’ சுற்று நடத்தப்பட்டது. இதில், அசத்திய இந்திய வீரர் அன்குர் மிட்டல் தங்கப் பதக்கத்தை பெற்று முதலிடம் பிடித்தார். சீனாவி இயாங் யாங் வெள்ளி வென்றார். ஹூபர்ட் ஆன்ட்ராஜ் வெண்கலத்தை கைப்பற்றினார்.

மற்ற இந்திய வீரர்களான ஆசாப் முகமது 135 புள்ளிகளுடன் 7ம் இடத்தையும், ஷர்துல் விஹான் 134 புள்ளிகளுடன் 15ம் இடத்தையும் பெற்றனர்.

More News >>