டெல்லியில் இன்று மிதமான நில அதிர்வு
டெல்லியில் இன்று மாலை மிதமான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
டெல்லியில் என்சிஆர் எனப்படும் டெல்லி பிரதேசத்தில் இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மிதமான நில அதிர்வு என்பதால், பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலி டெல்லி குருகிராம் போன்ற பகுதிகள் நில அதிர்வுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.