பாரிசில் கத்தி குத்து தாக்குதல்: 7 பேர் படுகாயம்nbsp
By Radha
பாரிசில் மர்ம நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடகிழக்கு பகுதி Canal de l’Ourcq என்ற இடத்தில் அந்த நாட்டின் உள்ளூர் நேரம் இரவு 10.45 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
இதனை பார்த்த பொதுமக்கள், அந்த நபரை துரத்தி சென்றனர். அவர்கள் மீது கத்தி மற்றும் இரும்பு கம்பியை மர்ம ஆசாமி வீசி எறிந்துள்ளார். இதில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் மொத்தம் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாரிஸ் காவல்துறை, தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகுவதால் தொடர்கதையாகி இருப்பதால் அந்நாட்டு மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.