பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச குடை, ரெயின்கோட்
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக குடை மற்றும் ரெயின் கோட் வழங்கப்படும் என்று கொல்கத்தா நகராட்சி அறிவித்துள்ளது.
அரசின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் அவர்களுக்கு தேவையான, சீருடைகள், காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகராட்சி மாணவ, மாணவியருக்கு இலவசமா கொடை மற்றும் ரெயின் கோட் வழங்க முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், கோடைக்காலத்திலும், மழைக்காலத்திலும் தங்களை பாதுகாத்துக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடைப்படாமல் இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இதனால், சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் பயங்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.