வெப்பச் சலனம் எதிரொலி: தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடைக்காலத்தில் இருப்பது போன்ற வானிலை தற்போது இருந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.குறிப்பாக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தொடர்ச்சியாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதேபோல் நேற்று முன்தினம் 6 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் அடித்தது.

சென்னையில் பொருத்தவரையில் நேற்று பகல் வெயில் அதிகமாக உணரப்பட்டது. கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.

இதைதவிர, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அதிகபட்சம் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் 5 செ.மீ., அரியலூரில் 3 செ.மீ மழை பதிவானது.

இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைதவிர, தமிழகத்தில் இன்று முதல் 15 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>