மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் இருந்தபடி தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இவரது போராட்டம் கடந்த 7ம் தேதியுடன் 14வது நாளாக உண்ணாவிரதம் நீடித்ததை அடுத்து, ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மிகவும் சோமடைந்தது. இதனால், ஹர்திக் பட்டேலை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.
அங்கு 16வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார்.இதன் எதிரொலியாக, ஹர்திக் பட்டேலின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களை போலீசார் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.