எல்லையில் துப்பாக்கி சூடு: தமிழக வீரர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: இந்தியா&பாகிஸ்தான் எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மூர்த்தி உள்பட மூன்று பேர் பலியாயினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு உட்பட்ட கெரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், இந்திய எல்லையில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் தமிழகம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி உள்பட 3 வீரர்கள் பலியானார்கள். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் தமிழகத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மூர்த்தியின் உடலுக்கு அரசு மரியாதை செய்த பிறகு, அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.