ரஜினியின் பேட்ட படம்... படக்குழு அதிர்ச்சி

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிட்சா, பிட்சா 2, இறைவி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தெரவித்தார்.

அதன்படி, கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படம் தொடர்பான யூகங்கள் முன்பே கசிவதை தடுக்க, பேட்ட படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி ரஜினி நடிக்கும் காட்சிகள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

ஒரு படத்தில் போலீஸ் வாகனத்தின் முன் இருக்கையில் ரஜினிகாந்த் அமர்ந்து செல்வது போன்றும் அருகில் பர்தா அணிந்த பெண் நடந்து செல்வது போன்றும் காட்சி உள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த படங்களை வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. போலீஸ் வாகனத்தில் செல்வதால் பேட்ட படம் பயங்கரவாதத்துக்கு எதிரான கதையாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

More News >>