எலி காய்ச்சலில் இருந்து தப்புமா தமிழகம்
அப்போ பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் இப்போ எலி காய்ச்சல். சரி, பார்ப்போம் என்னதான் இந்த எலி காய்ச்சல் செய்ய போதுனு.
எலி காய்ச்சல் அப்டினா என்ன?
எலிகள் மற்றும் எலிகளிலிருந்து மனிதர்களுக்கு அனுப்பப்படும் ஒரு பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் சிறுநீர் மற்றும் சளி சுரப்பிகளின் மூலம் பரவ ஏதுவாக உள்ளது.
இவை எலி கடிப்பதன் மூலம் அல்லது மனித உடலில் எந்த வெட்டு காயம் இருந்தாலும் அதன் மூலம் பரவும் நிலை உள்ளது.
பெரும்பாலும் கருப்பு மற்றும் பழுப்பு எலி மூலம் மக்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. அப்படியிருக்க தற்போது கேரளாவில் எலிக்காய்ச்சல் பரவி வருகின்றது. அதற்கு காரணம் அங்கு ஏற்பட்ட வெள்ள பெருக்கே.
காரணம்:
கேரளாவில் பரவும் போது தமிழகத்திற்குள் பரவ 100% வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் எலிக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
எலிக்காய்ச்சல்:
● இது சாதாரண காய்ச்சல் போன்று தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.● எலிகளின் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் இவை பரவுகின்றனர்.● Leptospirosis என அழைக்கப்படுகின்றன.● இவை Leptospiro எனும் நுண்ணுயிர் கிருமியால் பரவுகின்றன.
பரவும் முறை:
அசுத்தமான நீரில் Leptospira என்ற நோய் கிருமி இருக்கும். எலிகள் இந்நீரை குடிக்கும்போதோ அல்லது அவற்றின் மீது படுக்கும்போதோ இந்த நுண்ணுயிர்கள் எலியின் மேல் ஒட்டிக் கொள்ளும்.
இதன் முடியோ, கழிவுகளோ மனிதர்கள் தெரியாமல் பயன்படுத்தும்போது இக்கிருமி மனிதர்களில் பரவ தொடங்குகிறது.
தெருக்களில் நீர் தேங்கி இருந்தாலோ அல்லது நம் வீட்டின் நீரில் எலிகளின் எச்சில், கழிவுகள் சிறிது அதில் கலந்தாலே எலிக்காய்ச்சல் உருவாக்கிவிடுமாம்.
தடுக்கும் முறை:
செருப்பு அணியுங்கள்:
எலிகளின் தொற்றுகள் நீரில் கலந்திருந்து, அவை நம் வெறும் கால்களில் படும்போது எலிக்காய்ச்சல் வர வாய்ப்புண்டு.
அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட உணவை உண்ணுங்கள்.
நாம் இருக்கும் இடத்தை மிக தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
அறிகுறிகள்:
மோசமான தலைவலி.வயிற்று வலி.உடல் வலி.வயிற்றுப்போக்கு.வாந்தி.மயக்கம்.குமட்டல்.
கண்டறியும் முறை:
ஐ.ஜி.எம். எலிசா ரேபிட் டெஸ்ட் (IGMElisa Rapid Test) இணைய அணுக்கள் பரிசோதனை மூலம் இந்நோயை கண்டறியலாம்.
தமிழகத்தை பாதுகாக்க:
இதுமாதிரியான பல நோய்களையும், பல உயிரிழப்புகளையும் பார்த்திருக்கும் தமிழகம் இதிலிருந்து விடுபடஒவ்வொருவரும் தங்கள் வீடு, தெரு என அனைத்தையும் தூய்மையாக வைத்து காக்கவேண்டும் என்பது நம் அனைவரின் கடமையாகும்.