அருவி ஹீரோயினுக்கு சூப்பர் ஸ்டாரின் சர்ப்ரைஸ் கிப்ட்
அருவி படத்தின் ஹீரோயின் அதிதி பாலனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆச்சரிய பரிசாக தங்க சங்கிலியை வழங்கியுள்ளார். இதனால், படக்குழுவினர் இன்பதிர்ச்சியில் உள்ளனர்.
அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து வரும் நயன்தாரா, சமந்தா, ஸ்ருதி ஹாசன் போன்ற முன்னணி ஹீரோயின்கள் நடிக்க மறுத்ததை அடுத்து, இயக்குனர் அருண் பிரபு புதுமுகமான அதிதி பாலனை தேர்வு செய்து படத்தை எடுத்தார்.
அருவி படம் வெற்றிப்பெற்றதை அடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதால் ஆனந்தத்ல் இருப்பதாக அதிதி தெரிவித்தார்.இந்நிலையில், அருவி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் படக்குழுவினர்களை போனில் அழைத்து பாராட்டினார். மேலும், அதிதி புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரஜினியிடம் கேட்டுக்கொண்டாராம். இதற்கு ஓகே சொன்னதை அடுத்து, அதிதி பாலன், அருண் பிரபு உள்ளிட்டோர் ரஜினியை சந்திக்க சென்றுள்ளனர்.
அங்கு தான் இவர்களுக்கு இன்பதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அருவி குழுவை சந்தித்த சூப்பர் ஸ்டார் பாராட்டியது மட்டுமல்லாமல் தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சியில் உள்ள அதிதி பாலன் திக்குமுக்காடி போய் உள்ளாராம்.