பிரபல நடிகரின் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடுமை
பிரபல பாலிவுட் சீரியல் நடிகரின் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி தொலைக்காட்சிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் Sumeet Sachdev. இவரது மனைவி Amrita Gujral 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
கோவாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் முக்கிய பதவியில் இருந்து வந்த அமிர்தா, கர்ப்பமாக இருந்ததால் விடுமுறையில் இருந்துள்ளார்.
ஆனால் அவருக்கு விடுமுறை வழங்க மறுத்த அமிர்தாவின் மூத்த அதிகாரி பிரஹலாத் அத்வானி, விடுமுறையை நீக்கிவிட்டு பணிக்கு திரும்பும்படி அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் மன உலைச்சலுடன் பணியில் இருந்த அமிர்தாவிற்கு திடீரென உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமிர்தாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர் சுமித் மற்றும் அவரது மனைவி இருவரும் மிகுந்த மன வேதனையில் இருந்து வருகின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான ஒரு பதிவையும் சுமித் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சுமித் ரசிகர்களிடம் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமிர்தா பணிபுரிந்துவந்த ஹோட்டல் அதிகாரி மீது காவல்துறையிடம் நடிகர் சுமித் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.