வாராக்கடன்... ரகுராம் ராஜன் கூறிய பகீர் தகவல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் தான் வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உண்மையை உடைத்துள்ளார்.

வங்கிகளின் வாராக்கடன் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கான விளக்கம் அளிக்கும்படி, மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழு கேட்டு இருந்தது.

இது தொடர்பாக லோக்சபா குழுவுக்கு ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தில், " 2-வது முறையாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்த போது, நிலக்கரி உள்ளிட்ட பல ஊழல் புகார்கள் எழுந்தன.

இதன் காரணமாக பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. இதனால் செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. லாபமும் குறைந்தது; கடன் வசூலும் பாதிக்கப்பட்டது."

"வங்கிகளின் சொத்து தரத்தை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால், விசாரணைக்கு வங்கிகள் பயந்த காரணத்தால், கடன் வழங்குவதிலும், வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டது. கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுணக்கம் காட்டியதே வாராக்கடன் அதிகரிப்பு காரணம்" என விளக்கம் அளித்துள்ளார்.

More News >>