புதிய பரிமாணத்தில் வசந்த மாளிகை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'வசந்தமாளிகை' படம் டிஜிட்டல் மூலம் புதிய பரிமாணத்தில் வெளியாக உள்ளது.
1972ஆம் ஆண்டு கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் வசந்தமாளிகை. நடிகர் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
கே. வி. மகாதேவன் இசையில், கண்ணதாசன் எழுதிய, 'மயக்கம் என்ன', 'கலைமகள் கைபொருளே', 'இரண்டு மனம் வேண்டும்', 'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்' ஆகிய பாடல்கள் இன்றளவும் சூப்பர் ஹிட்டாக வலம் வருகின்றன.
இந்த படத்தை அன்று டி. ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். இப்படம் வி. சி. குகநாதன் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது.
இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.