ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர்- துரைமுருகன்

திமுக தலைவர் ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின், பொருளாளர் துரைமுருகன், "55 ஆண்டுகள் கலைஞரை நிழல் கூட பிரிந்திருக்கலாம் நான் பிரிந்ததில்லை, குடும்பத்தை விட தலைவரின் அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம்."

“கலைஞர் கருணாநிதி போன்ற ஒரு தலைவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தோன்ற முடியும். அகில இந்திய கட்சிகளின் தலைவருக்கெல்லாம் தலைவர் கருணாநிதி என இந்திராகாந்தி புகழந்தவர்.தாழ்த்தப்பட்டவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என நாரயணனை குடியரசு தலைவராக்கியவர் கருணாநிதி."

“திமுக ஒரு ஜீவ நதி அது என்றும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை நிரப்பியுள்ளார் ஸ்டாலின். டெல்லியில் அமைய இருக்கிற ஆட்சியை நிர்மாணிக்க கூடிய சக்தி ஸ்டாலினிடம் உள்ளது. இனி அவர் கைகாட்டுபவர் தான் பிரதமர்" என துரைமுருகன் பேசினார்.

More News >>