ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டி.டி.வி தினகரன் முன்னிலை

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 2ம் சுற்றிலும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 7276 வாக்குகள் பெற்ற முன்னிலையில் உள்ளார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. இதன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக 257, திமுக 92, சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 412, பாஜக 6, நாம் தமிழர் கட்சி 0 வாக்குகள் பெற்றனர். இதில், டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.

இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவிலும், டிடிவி தனகரன் 7276 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், மதுசூதனன் 2738 மற்றும் மருதுகணேஷ் 1182 வாக்குகள் பெற்றும் பின்தங்கி உள்ளனர்.   

More News >>