புற்றுநோய் ஆராய்ச்சி - இந்திய அமெரிக்க பேராசிரியருக்கு விருது
அமெரிக்காவில் மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அருண் சின்னையன். புற்றுநோய் சிகிச்சை பற்றி ஆய்வு செய்து வரும் இவருக்கு அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் 'சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது' (Outstanding Investigator Award) வழங்கியுள்ளது. ஆய்வுக்காக ஏழு ஆண்டுகளுக்கு 6.5 மில்லியன் டாலர் நிதியுதவியும் அனுமதித்துள்ளது.
மரபணுவை ஆராய்ந்து ஏற்ற வகையில் சிகிச்சை அளிக்கும் ப்ரெசிஷன் (Precision oncology)சிகிச்சையின் முன்னோடியாக அருண் சின்னையா விளங்குகிறார். 2010ம் ஆண்டு மிக்ஸிகன் புற்றுநோய் சீக்வென்சிங் (Mi-ONCOSEQ)முறையை இவர் ஆரம்பித்துள்ளார்.
"பிரெசிஷன் சிகிச்சை முறை புற்றுநோய் பாதிப்புள்ளவர்களுக்கான பரிசோதனையின் தரத்தை உயர்த்துவதோடு, இன்னும் நல்ல சிகிச்சை வழங்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது," என்று அருண் சின்னையன் தெரிவித்துள்ளார்.
அதிகம் விளக்கப்படாத எல்என்சி ஆர்என்ஏ (lncRNAs) பற்றிய மரபணு தொகுதியின் பகுதி குறித்தும் சின்னையனின் ஆய்வகம் பரிசோதனை செய்துள்ளது.