விஜய் மல்லையா இந்தியாவை விட்டு தப்பிக்க உதவியதா பாஜக?

வங்கிகளில் பல கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு செல்லும் முன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு, 9 ஆயிரம் கோடிக்கு மேல் வங்கியில் கடன் வாங்கி அதை திருப்பித் தராமல் இந்தியாவை விட்டு தப்பியோடியவர் விஜய் மல்லையா. அவரிடமிருந்து கடன் தொகையை திருப்பிப் பெறவும், இந்தியாவிற்கு திரும்ப வரவழைத்து தண்டனை வாங்கி கொடுக்கவும் இந்தியா போராடி வருகிறது.

லண்டன் நீதிமன்றம் அவர்மீதான வங்கி மோசடி வழக்கு விசாரித்து வருகிறது. இன்று நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா, “இந்தியாவை விட்டு செல்லும் முன் அருண் ஜெட்லியை சந்தித்து தன் வங்கி கடன் அடைப்பது குறித்தும், தனது சென்டில்மென்ட் கடிதங்களுக்கு வங்கி ஆட்சேபனை தெரிவித்ததாகவும்” பேசியுள்ளார்.

பாஜக அரசின் நிதியமைச்சராக அருண் ஜெட்லி இருந்தபோது விஜய் மல்லையா இந்தியாவை விட்டு சென்றார்.

எனவே, “விஜய் மல்லையா தப்பி சென்றதற்கு பாஜக காரணமாக இருந்திருக்கும்” என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதோடு அவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More News >>