நாடு முழுவதும் 328 மருந்துகளுக்கு அதிரடி தடை!

மத்திய சுகாதார அமைச்சகம் 328 மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு உடனடியாகத் தடை விதித்துள்ளது.

2018 செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் படி இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. மருந்துகள் ஒப்பனைப் பொருட்கள் சட்டம் 1940 26 ஏ பிரிவின் கீழ் 344 வகையான மருந்துகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்து. அரசிதழில் 2016ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது

அரசின் இந்த முடிவை எதிர்த்து மருந்து உற்பத்தியாளர்கள் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி மருந்துகளை தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆய்வு செய்தது.

அந்த போர்டு அளித்த அறிக்கையில், 328 மருந்துகளில் உள்ள பொருட்கள் ஆபத்தில்லாதவை என்று மருத்துவ ரீதியில் நியாயப்படுத்த இயலாது என்று குறிப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சாரிடான் (வலி நிவாரணி), க்ளூகோநாம் பிஜி (ஆன்டி பயோடிக்), டாசிம் ஏஇசட் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகளுக்கு, சில நிபந்தனைகளுடன், மருத்துவப் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

328 மருந்துகளில் வேதி பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், இவைகள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டது.

More News >>