விற்பனைக்கு வந்த எண்ணெய் பாக்கெட்டில் அழுகிய எலி...!
"விலைக்கு வாங்கிய எண்ணெய் பாக்கெட்டில் அழுகிய நிலையில் எலி" ஒன்று இருந்ததாக, சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பைத்தூர் கிராமத்தில் உள்ள நபர் அதிர்ச்சி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
பைத்தூர் கிராமத்தில் குமரவேல் என்பவர், கடந்த 10ம் தேதி, இராணிப்பேட்டையில் உள்ள லட்சுமி ஸ்டோர்ஸில் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு சென்று எண்ணெய் பாக்கெட்டை பிரித்து பார்த்தப்போது அதில் அழுகிய நிலையில் எலி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சொல்லவே, கடையில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
மேலும், சத்யம் கடலை எண்ணெய் ஆலையில் ஆய்வு நடத்தப்படும் எனவும், நடுநிலையுடன் விசாரணை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.