பெண்களுக்கு எந்தப் பக்கம் மூக்கு குத்தினால் நல்லது..?
பெண்கள் என்றாலே அழகுதான். இதிலும் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அவர்கள் தன் உடலில் தங்கம் அணிந்து அழகேற்றுகின்றனர். இதனால் தங்கத்தால் அவர்கள் அழகா? இல்லை அவர்களால் தங்கத்துக்கு அழகா? என்று சொல்ல முடியாது.
அந்த காலம் முதல் இந்த காலம் வரை பெண்கள் அனைவரும் காது குத்துவது இயல்பு. ஆனால் மூக்கு குத்தும் பழக்கம் நாளடைவில் குறைந்து வருகிறது.
அப்படி மூக்கு குத்துவது என்று முடிவு எடுத்தாலும், எந்தப் பக்கத்தில் மூக்கு குத்துவது, இடதா? அல்லது வலதா? என்ற குழப்பமும் நீடிக்கிறது.
இதோ உங்கள் குழப்பத்திற்கான தீர்வு!!!
மூக்கு குத்துவது இந்தியர்களின் வழக்கமாகும். அதிலும் இந்துகள் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். ஒரு பெண் திருமணமானவள் மற்றும் திருமணத்துக்கு தயாராக உள்ளால் என்பதை குறிக்கவும் மூக்கு குத்துகின்றனர்.
வழக்கத்தில் வட இந்திய பெண்கள் மூக்கின் இடதுப் பக்கத்திலும், தென்னிந்திய பெண்கள் மூக்கின் வலப்பக்கத்திலும் மூக்கு குத்துகின்றனர்.
இடதுப் பக்கம்:
மூக்கு குத்துவதற்கு சிறந்த பக்கம் இடதுப்பக்கம்தான். ஏனெனில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் மூக்கின் இடதுப்பக்கத்தோடு தொடர்புடையதாக ஆயுர்வேதம் கூறுகிறது.
இதனால் பிரசவக்காலத்தில் வலிகுறைந்தும் எளிதாகவும் குழந்தைப் பிறக்கும் என்பது ஐதீகம். அதோடு மாதவிடாய் பிரச்சனைகளும் தீரும்.
வலதுப் பக்கம்:
மேற்கத்திய கலாச்சாரத்தின் படி, பெரும்பாலான ஆண்கள் இடதுப் பக்கத்திலும் பெண்கள் வலதுப் பக்கத்திலும் மூக்கு குத்துவது வழக்கம்.
பெண்கள் பொதுவாக இடது பக்கம் படுப்பது நன்று. இடதுப் பக்கம் மூக்கு குத்தும் போது அவர்களால் சாதரணமாக படுக்க முடியாது. மூக்குத்தி குத்தும். இதனால் அவர்கள் வலதுப் பக்கத்தில் மூக்கு குத்துகின்றனர்.
எந்தப் பக்கம் மூக்கு குத்தினால் என்ன? உங்களுக்கு எந்தப் பக்கம் அழகாக இருக்கிறது என்று பார்த்து மூக்குத்துங்கள்.