வாரணாசியில் ஐந்தாயிரம் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடும் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட வரும் 17ம் தேதி வாரணாசி செல்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17ம் தேதி ஆகும். இந்நிலையில், வரும் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு 67 வயது முடிந்து 68வது வயதில் அடி எடுத்து வைக்கிறார்.
தனது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார். அங்குள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்று, பாரா லால்பூரில் உள்ள ஐந்தாயிரம் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதை தவிர, வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவும், தொடர்ந்து புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
இதைதொடர்ந்து, மறுநாள் வாரணாசியின் புறநகர் பகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.