கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு திடீரென கணைய அழற்சி ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சென்று மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று கடந்த ஜூன் மாதம் நாடு திரும்பினார்.
இதன் பிறகும், உடல்நிலை மீண்டும் சீராக இல்லாததால், இரண்டும் முறை அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.