மீண்டும் காக்க காக்க கெட்டப்பில் சூர்யா!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் கைகோர்த்துள்ள சூர்யா, தற்போது ‘காக்க காக்க’ பட கெட்டப்பில் மோகன் லாலுடன் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ‘சூர்யா 37’ படத்திற்கான லுக் இதுவாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். ராணுவ வீரர் அல்லது போலீஸ் கதையாக இருக்க வாய்ப்புள்ளது.

அப்போ, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த என்.ஜி.கே படம் என்னாச்சு பாஸ்? என்கின்ற கேள்வியும் சூர்யா – செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், தான் என்.ஜி.கே படம் தள்ளிப்போயுள்ளதோ என்ற வருத்தமும் எழுந்துள்ளது.

இயக்குநர் செல்வராகவன், உடல்நலக் குறைவு காரணமாக படத்தின் பணிகள் தள்ளிப்போயுள்ளதால், கே.வி. ஆனந்த் படத்தில் நடிக்க சூர்யா தயாராகி விட்டாரோ?

எது எப்படியோ.. அதிகாரப்பூர்வ தகவல் படக்குழுவினரால் வழங்கும் வரை காத்திருப்போம்..!

More News >>