ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து: இதுவரை 20 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் நேற்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மீட்புக் குழுவினருடன் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில், 11 பேர் உயிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும், படுகாயமடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து நேர்ந்த அதே பகுதியில், இந்த மாதத்தில் ஏற்கனவே இரண்டு பெரிய விபத்துகள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.