செங்கோட்டை கலவரம்... 15 பேரிடம் விசாரணை
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 15 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில், கல் எறிதல், தடியடி மற்றும் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, செங்கோட்டை, தென்காசி வட்டங்களில் ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் தாலுகாக்களில் மறுஉத்தரவு வரும்வரை மதுக்கடைகளை மூடவும் உத்தர விடப்பட்டது. அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கலவரத்திற்கு காரணமாக கருதப்படும் இரு தரப்பை சேர்ந்த 15 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இன்று மாலை கடையநல்லூரில் நடைபெற உள்ள விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுவதற்கு 250க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.