நிலவுக்கு சுற்றுலா செல்ல ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

நிலவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.    இதற்காகப் பிக் ஃபால்கான் என்ற மிகப் பெரிய ராக்கெட் தயாரிக்கப்படுவதாக அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. நிலாவுக்கு பயணிகள் இருவரை அழைத்து சென்று விட்டு வீடு திரும்பும் வகையில், திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.    முதன்முறையாக நிலாவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் பெருமையுடன் கூறியுள்ளது. இந்த திட்டம் தொடரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி அமெரிக்கா நிலவில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளது.    சந்திரனின் உட்புறத்தில் மிக தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.
More News >>