உலர் பழங்கள் நிறைந்த சுவையான போளி...

கடலை போளி, தேங்காய் போளி என வகை வகையா போளிகள் செஞ்சி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த முறை கொஞ்சம் புதுசா, உலர் பழங்கள் நிறைந்த போளியை செஞ்சு சாப்பிட்டு சொல்லுங்க.

தேவையானவை:

ஊற வைத்து தோல் உரித்த பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10

உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் - தலா 4

பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்

மைதா மாவு - ஒரு கப் கப்

கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

நெய் - ஒரு சிறிய கப்

நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:

பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைத்து தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து கெட்டியான பூரணமாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டிக் கொள்ளவும்.

மைதா மாவுடன் கேசரி பவுடர், நல்லெண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து,சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். இதை ஒரு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டை வைத்து மூடி, போளியாக தட்டி, தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.

பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த போளியை, முந்தைய நாளே பூரணம் செய்து வைத்துக் கொண்டு, மறுநாள் தயாரிக்கலாம். வேலை சுலபமாக இருக்கும்.

More News >>