நான்காம் சுற்று முடிவுகளும், டி.ராஜேந்தர் கருத்தும்...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஐந்தாம் சுற்று முடிவில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
டிசம்பர் 21-ஆம் நாள் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 5-வது சுற்று முடிவில் டி.டி.வி தினகரன் 24,132 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 13,057 வாக்குகள். திமுக வேட்பாளர் மருதுகேணஷ் 6,606 வாக்குகள் பெற்றுள்ளனர்,
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள டி.ராஜேந்தர், ”இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்பது மாயை... டிடிவி தினகரனின் முன்னிலை, யாருக்கெல்லாம் பின்னிலை என்பதைத் தெளிவுப்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.