பிலிப்பைன்ஸை பயங்கரமாக தாக்கிய மங்குட் புயல்: 14 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை  பயங்கரமாக தாக்கிய மங்குட் புயல் பாதிப்பில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். இயற்கை பேரிடரால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுள் பிலிப்பைன்சும் ஒன்று. அந்த நாட்டை அடிக்கடி புயல்கள் தாக்குவதுண்டு. அந்த வரிசையில் மங்குட் புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை கடுமையாக தாக்கியுள்ளது.    இது இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த புயல் என கருதப்படுகிறது. புயல் காரணமாக பிலிப்பைன்சின் வடக்கு கடற்கரை பகுதியில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.  பசிபிக் பெருங்கடலிலிருந்து மணிக்கு 255 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.    வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. மின்சாரம் தடைபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.  புயல் ஏற்படுத்திய பாதிப்பில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். மேலும், பலரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More News >>