மீண்டும் ஆதிக்குடன் கைகோர்த்த ஜி.வி. பிரகாஷ் !
ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அடல்ட் காமெடி படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் கடும் விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஆதிக் எடுத்த அஞ்சாதவன், அன்பானவன், அடங்காதவன் படம் படு மொக்கையாக அமைய, ஆதிக்குக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
தற்போது, மீண்டும் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து, தனது புதிய படத்தை இயக்க களமிறங்கிவிட்டார் ஆதிக். இம்முறையும் அடல்ட் காமெடி களத்தில் இருந்து பின் வாங்கவில்லை என்பது டைட்டிலிலேயே தெரிகிறது.
”காதலை தேடி நித்யா நந்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ், மீண்டும் ஆதிக்குடன் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என ட்வீட்டியுள்ளார்.
இப்படத்தில் அநேகன் பட நாயகி அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி என இரு நாயகிகள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிக் கட்ட படப்பில், என்று போஸ்டரில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியே அந்த டிரிபிள் ஏ இரண்டாம் பாகம் எப்போ வரும்னு சொல்லிடுங்க பாஸ்!