2018 சைமா விருது பட்டியல்: மெர்சலுக்கு 5 விருதுகள்!
சிறந்த தென்னிந்திய மொழிப் படங்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் சைமா விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. 2017ம் ஆண்டில் வெற்றிப் பெற்ற தென்னிந்திய மொழிப் படங்களுக்கான விருது வழங்கும் விழா சைமா 2018 துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை சேர்ந்த கலைத்துறை கலைஞர்கள் பங்கேற்றனர்.
சைமா விருது பட்டியல் இதோ...
வாழ்நாள் சாதனையாளர் விருது: பி.சுசீலா
சிறந்த படம்: விக்ரம் வேதா
சிறந்த இயக்குனர்: அட்லீ (மெர்சல்)
சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (வேலைக்காரன்)
சிறந்த நடிகர்: மாதவன் (விக்ரம் வேதா)
சிறந்த நடிகை: நயன்தாரா (அறம்)
சிறந்த நடிகை: அதிதி பாலன் (அருவி)
சிறந்த துணை நடிகர்: எம் எஸ் பாஸ்கர் (8 தோட்டாக்கள்)
சிறந்த துணை நடிகை: சிவதா (அதே கண்கள்)
சிறந்த வில்லன் நடிகர்: எஸ் ஜே சூர்யா (மெர்சல் & ஸ்பைடர்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான் (மெர்சல்)
சிறந்த பாடலாசிரியர்: விவேக் (ஆளப்போறான் தமிழன் - மெர்சல்)
சிறந்த பின்னணிப் பாடகர்: சித் ஸ்ரீராம் (மெர்சல்)
சிறந்த பின்னணிப் பாடகி: லக்ஸ்மி சிவனேஷ்வரலிங்கம் (போகன்)
சிறந்த அறிமுக நடிகர்: வசந்த் ரவி (தரமணி)
சிறந்த அறிமுக நடிகை: அதிதி ராவ் ஹைத்ரி (காற்று வெளியிடை)
சிறந்த அறிமுக இயக்குனர்: அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி)
சிறந்த காமெடி நடிகர்: சூரி (சங்கிளி புங்கிளி கதவ தொற)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் (காற்று வெளியிடை)
மெர்சலுக்கு 5 விருதுகள்.. ஆனால்?
சைமா விருதுகள் வழங்கும் விழாவில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சலுக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால், மெர்சல் படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்து படத்திற்கு முழு பலமாக இருந்த விஜய்க்கு சிறந்த நடிகர் விருது வழங்காதது, அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த நடிகர் விருதை வேலைக்காரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கியதும் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சீமராஜா படம் ரிலீஸ் ஆனதால், துபாயில் நடக்கும் சைமா விருதுக்கு சிவகார்த்திகேயன் செல்லவில்லை. அவருக்கு பதிலாக அவரது நண்பரும் கமெடி நடிகருமான சதிஷ் அவ்விருதினை பெற்றுக் கொண்டார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது:
வாழ்நாள் சாதனையாளர் விருது பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடிய பி.சுசிலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை அறிவித்தபோது, அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தினர்.
தமிழ் படங்களை தொடர்ந்து, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான பாகுபலி 2ம் பாகத்திற்கு பல விருதுகள் காத்துக் கிடக்கின்றன.