கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தா உள்ள பிரபல பக்ரி என்ற மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் பிரபல பக்ரி சந்தை உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது. நடைபாதையில் ஏற்பட்ட சிறு தீ, கடைகளில் மள மளவென பரவியுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் தெரியவந்தை அடுத்து, தீயணைப்ப துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் மிக கடுமையான போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில், இதுவரை உயிர் சேதம் எதுவும் இல்லை என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தீ மளமளவென பரவி வருவதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.