வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று இரவு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்து விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏராளமான செயற்கைகோள்கள் ஏவப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில், இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ் 1-4 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதில், நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றம் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும் எஸ் 1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகர்ப்புற மேலாண்மையின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 44வது பிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன், நேற்று முன்தினம் பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். இறுதியாக நேற்று இரவு 10.08 நிமிடங்களுக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இரண்டு செயற்கைகோள்களும் பூமியில் இருந்து ஏவப்பட்ட 17வது நிமிடத்தில், 583 கி.மீ., உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

More News >>