ஏழாவது சுற்று முடிவுகளும், அதிமுக அமைச்சர் கருத்தும்...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஏழாவது சுற்று முடிவில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
டிசம்பர் 21-ஆம் நாள் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 7-வது சுற்று முடிவில் டி.டி.வி தினகரன் (சுயேச்சை) - 34,346, மதுசூதனன் (அதிமுக) - 17,471, மருதுகணேஷ் (திமுக) - 9,206, கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 1,732, கரு. நாகராஜன் (பாஜக)- 519, நோட்டா- 925 ஆகிய வாக்குகள் விழுந்துள்ளன.
செல்லூர் ராஜூ:
இது குறித்து கூறியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்கள் மீதான கோபம், ஆதங்கத்தில் மக்கள் தினகரனுக்கு வாக்களித்து இருக்கலாம். டி.டி.வி.தினகரனின் வெற்றியால் அதிமுகவுக்கு தோல்வி இல்லை என்று தெரிவித்தார்