ஜெர்மனி மாரத்தானில் புதிய உலக சாதனை படைத்த ஒலிம்பிக் சாம்பியன்

ஜெர்மனி பெர்லினில் பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் கென்ய வீரர் எலியாட் புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கென்ய நாட்டு வீரரும், ஒலிம்பிக் சாம்பியனான எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் ஓடி இலக்கை அடைந்து புதிய உலக சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பாக, கடந்த 2014ம் ஆண்டில் பெர்லினில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், கென்யாவின் டென்னிஸ் கிமெட்டோ 2 மணி 2 நிமிடம் 57 வினாடிகளில் இலக்கை அடைந்தார். இதுவே உலக சாதனையாக கருதப்பட்டு வந்த நிலையில், எலியாட் கிப்சோஜ் அதனை முறியடித்துள்ளார்.

புதிய உலக சாதனை படைத்த இந்நாளை என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று எலியாட் கிப்சோஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார். இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More News >>