எச்.ராஜாவை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்
காவல் துறை மற்றும் உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜாவை பிரபல நடிகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
இதனால், எச்.ராஜா மீது 8 வழக்குகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எச்.ராஜாவின் கீழ்தரமான பேச்சுக்கு நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சித்தார் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுத் தள்ளும் தமிழக போலீசார், உயர் நீதிமன்றம், போலீசார், சிறுபான்மையினர் குறித்து எச்.ராஜா கீழ்தரமாக பேசிய தொனி, போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. இந்துத்துவம் என்ற பெயரில் இவ்வாறு பேசுவது சரியா ? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.