2018ல் ஹாட்ரிக் தங்கம்: மேரிகோம் அசத்தல் !
சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
போலாந்தில் உள்ள கிலிவெய்ஸ் நகரில், பெண்களுக்கான 13வது சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில், 48கிலோ எடைப்பிரிவில் இறுதிச்சுற்றுப் போட்டியில் கஜகஸ்தானின் அய்ஜெரிம் கசனாயேவாவுடன் மோதினார். இப்போட்டியில், 5-0 என அய்ஜெரிம் கசனாயேவவை மேரிகோம் வாஷ் அவுட் செய்து தங்கத்தை தட்டிச் சென்றார்.
இந்த தங்கத்துடன், இந்த ஆண்டு இவர் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
அரையிறுதிப் போட்டியில், தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனைகளான சரிதா தேவி(60கி.கி.,), லவ்லினா(69கி.கி.,) பூஜா ராணி(81கி.கி.,) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.