நாடாளுமன்ற தேர்தல்... திமுகவுடன் கைகோர்ப்பு- வைகோnbsp
By Radha
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்து செயல்பட உள்ளதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பெரியாரின் 140-வது பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், "இன்றைய சூழலில் சமூக நீதியை காக்க பெரியார் தேவைப்படுகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலையாவது உறுதி. இந்த விஷயத்தில் ஆளுநர் காலதாமதமாக செய்யமாட்டார் என நம்புகிறோம். "
"மதச்சார்பற்ற தன்மைக்கு வேட்டுவைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இந்த சூழலில் வரும் நாடாளுமன்ற தேர்தலில், திமுகவோடு கைக்கோர்த்து செயல்பட உள்ளோம்." என வைகோ கூறினார்.