நாளை முதல் சன்னி லியோன் தரிசனம்....!

பார்ன் ஸ்டார் நடிகை டு பாலிவுட் ஸ்டார் நடிகையான சன்னி லியோனின் பயோபிக், ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் கரன்ஜித் கவுர் என்ற தலைப்பில் ஒரிஜினல்ஸ் தொடராக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான முதல் சீசன், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், நாளை (செப்.,18) கரன்ஜித் கவுரின் 2வது சீசன் வெளியாகிறது.

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்த வெப்சீரிஸ் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் டிரெய்லரையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் சன்னி லியோன்.

தமிழ் மொழியாக்கத்தின் புரமோஷனுக்காக தற்போது சென்னை வந்துள்ள சன்னி லியோன், வடிவுடையான் இயக்கத்தில் நடித்து வரும் வீரமாதேவி படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News >>