ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்nbsp

உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ராஜா விளக்கம் அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் சனிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை அவதூறாகப் பேசியதாக வீடியோ வெளியானது.

இந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, எச்.ராஜாவின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் சுதா, ராஜ சேகர் உள்ளிட்டோர் நீதிபதி ஹுலுவாடி ஜி ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு முறையிட்டனர்.

"ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மனு தாக்கல் செய்தால் விசாரிப்போம்." என அந்த அமர்வு தெரிவித்தது. அதேசமயம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது

இதனிடையே, நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

More News >>